பணி நிரந்தரம் செய்யக்கோரி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின் நிலைய தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவள்ளூர் அனல் மின் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update: 2023-06-22 10:32 GMT

திருவள்ளூர் அனல் மின் நிலையம் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனர். வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை தி.மு..க அரசு நிறைவேற்ற வேண்டும், அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 60ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மின் வாரிய ஆணை 2ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் அத்தியாவசிய சேவைகளை வழங்கி வரும் மின்வாரிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அடுத்தகட்டமாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி வரும் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News