மீஞ்சூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் திருட்டு
மீஞ்சூரில் பிரியாணி வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்.;
மீஞ்சூரில் பிரியாணி வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 4.5லட்சம் ரூபாய் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் புதியதாக வீட்டுமனை வாங்குவதற்காக மீஞ்சூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 4.5லட்சம் ரூபாயை எடுத்து தமது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார். தொடர்ந்து அருகே உள்ள ஹோட்டலின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பிரியாணி வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திறந்த நிலையில் பணம் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து தேவி மீஞ்சூர் காவல் நிலையில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி வாங்க சென்று 4.5லட்ச ரூபாய் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.