பெரியபாளையம் அருகே கூலி தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
Today Crime News In Tamil- பெரியபாளையம் அருகே கூலி தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடப்பட்டது.;
Today Crime News In Tamil- திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்துள்ள கொள்ளுமேடு பகுதியில் வசித்து வருபவர் சேட்டு (வயது 45 ). இவரது மனைவி அம்பிகா. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சேட்டு கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் கேஸ் கட்டராக கூலி வேலை பார்த்து வருகிறார். அம்பிகா அருகில் உள்ள குங்குமம் கம்பெனியில் வேலை செய்கிறார்.
இந்த நிலையில் சேட்டு மற்றும் அவரது மனைவி நேற்று காலை வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டனர். மாலை சேட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை ரூ. 15 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இது குறித்து ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஆரணி காவல்துறை துணை ஆய்வாளர் பிரதாப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கூலி தொழிலாளி வீட்டில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2