வீட்டின் ஜன்னலை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை; போலீஸ் விசாரணை

மீஞ்சூர் அருகே வீட்டின் கழிவறை ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் 8சவரன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2023-04-17 01:45 GMT

மீஞ்சூர் அருகே, வீட்டின் கழிவறை ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள்  நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முதியவர் பார்த்தசாரதி. இவர் தமது மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 2.நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள இவரது இளைய மகள் வீட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிய நிலையில் இருந்தன. அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையின் ஜன்னலை உடைத்து அதன் வழியே கொள்ளையர்கள் வீட்டிற்குள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News