அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ
ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.
ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11ஆம் வகுப்பு கல்வி பயிலும் 190 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11.ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காவேரி தலைமை தாங்கினார்.பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், வார்டு கவுன்சிலர் கண்ணதாசன், தியாகராய கல்லூரி முன்னாள் முதல்வர் ரவிச்சந்திர பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புனித வள்ளி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு 11ஆம் வகுப்பு கல்வி பயிலும் 190 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் மாணவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் கல்வி மட்டும் தான் ஒரு மனிதனை சிறந்த இடத்திற்கு நம்மை கொண்டு சேர்க்கும் அரசு இதற்காக கோடி கணக்கில் செலவிட்டு மாணவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் பல இடங்களில் சாதித்து காட்டுகின்றனர் என்றார்.
இதில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் லதா, மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ஜெகன், ஆரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வி, மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர் பாபு நன்றி தெரிவித்தார்.