ஏரியில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் காங்கிரஸ் கட்சியினர் இறங்கி, பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-02-29 04:45 GMT

பழவேற்காடு ஏரியில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழவேற்காடு ஏரியில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து GO BACK MODI என முழக்கமிட்டனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர்.


இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காடு ஏரியில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி கருப்பு கொடிகளை ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கடந்த 10ஆண்டுகளாக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக குற்றம் சாட்டினர்.

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி GO BACK MODI என முழக்கமிட்டனர். கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த பாஜக அதனை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

Similar News