பெரவள்ளூர் ஆத்மலிங்கேசுவரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்
பெரவள்ளூர் வைத்தியநாத ஆத்மலிங்கேசுவரர் கோவில் மஹாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.;
பெரவள்ளூர் தையல்நாயகி உடனுறை அருள்மிகு வைத்தியநாத ஆத்மலிங்கே ஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டார்குப்பம் ஊராட்சியில் உள்ளது பெரவள்ளூர் கிராமம். இந்த கிராமத்தில் அருள்மிகு தையல்நாயகி உடனுறை அருள்மிகு வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயில் பழம் பெரும் புகழ்பெற்றதாகும். தற்போது புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தி, மதியம் 11 மணி முதல் 12 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனையடுத்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்து பிரசாதங்கள் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சோழவரம் திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்ராஜ், முக்கியபிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து, சுவாமியை வழிபட்டனர்.