Temple Kumbabiseka Function ஸ்ரீ பனையாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா:திரளான பக்தர்கள் தரிசனம்
Temple Kumbabiseka Function பொன்னேரி அருகே கொக்குமேடு கிராமத்தில் ஸ்ரீ பனையாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
Temple Kumbabiseka Function
பொன்னேரி அருகே 100.ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதையான ஸ்ரீ பனையாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கொக்குமேடு கிராமத்தில் சுமார் 100.ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதையான ஸ்ரீ பனையாத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் சற்று பழுதடைந்து காணப்பட்டது இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
Temple Kumbabiseka Function
கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.
சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3.நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா பூர்ணாகுத்தி, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து புதிய சிலைகள் பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அதனால அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வளம் வந்து பின்னர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
Temple Kumbabiseka Function
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், குங்குமம், தேன், பன்னீர், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆவணங்களால் அலங்காரம் செய்து பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.