ரோடு பழுதால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை: பெற்றோர் புகார்

அத்திபேடு பள்ளியில் நடந்த பெற்றோர் கூட்டத்தில், பழுதான சாலையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என பெற்றோர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.;

Update: 2022-03-21 02:00 GMT

அத்திப்பேடு ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்பில்,  நேற்று அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பேடு ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அத்திபேடு ரமேஷ் தலை மை தாங்கினார் தலைமையாசிரி யர் புனிதரானி வரவேற்றார். இதில் பங்கேற்ற பெற்றோர்கள், பள்ளியின் தரத்தை உயர்த்தி உயர்நிலைப்பள்ளி ஆக உயர்த்த வேண்டும் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட சாலை ஒன்று சுமார் 20 ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது.

சாலைகளை சீர்செய்யாததால்,  அப்பகுதியில் இருந்து வரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் என சரமாரியாக பலர் புகார் தெரிவித்ததால் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் துணைத்தலைவர் மோகன் ஆசிரியர்கள் லட்சுமி, ரெஸ்லின் மேரி, சுப்புலட்சுமி, அனுராதா, நளினி, பிரான்க்ளின் நிர்மலா, ரேணுகாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News