ஆரணியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநாய் தடுப்பூசி முகாம்

ஆரணியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;

Update: 2023-02-16 07:23 GMT

முகாமில் ஒரு நாய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆரணியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் இலவச வெறிநாய் தடுப்பூசி மற்றும் வெறிநாய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டக்டர்.கோபிகிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் வழக்கறிஞர் சுகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

இந்த முகாமில் ஆரணி அரசு அரசு பள்ளி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கால்நடை மருத்துவர்கள் மாணவர்களுக்கு வெறிநாய் கடித்துவிட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதாலும்  நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம்,மேலும் நாய் கடித்த உடனே கடிபட்ட இடத்தை சோப்பு தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

இதேபோல் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் வெளியே உள்ள தெரு நாய்களுடன் சேராமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் வருடந்தோறும் தடுப்பூசி, விஷ முறிவு ஊசிகளை கட்டாயமாக மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதில் ஆரணி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 133 வளர்ப்பு நாய்,மற்றும் பூணைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது.கால்நடை உதவி மருத்துவர்கள்,மெய் ஞானசுந்தர்,கிரிதரன், சித்ரா,ஷோபனா,ஆரணி வார்டு கவுன்சிலர்கள் கண்ணதாசன்,ரஹ்மான்கான், சந்தானலஷ்மி,செயல் அலுவலர் கலாதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News