புறநகர் ரயில்களை சிறைபிடித்து பயணிகள் 4 மணிநேரம் ரயில் மறியல் போராட்டம்

சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி ரயில் பயணிகள் புறநகர் ரயில்களை சிறைபிடித்து போராட்டம்

Update: 2021-08-07 15:20 GMT

பொன்னேரியில் பயணிகள் ரயில் மறியல்

 கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இன்று காலை கும்மிடி பூண்டியில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற புறநகர் ரயிலை பொன்னேரி ரயில் நிலையத்தில் மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மார்க்கத்தில் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விவசாயிகள், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 1மணி நேரம் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடக்க 2மணி நேரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர். குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் எனவும் உடனடியாக ரயில்வே துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி ரயில் பயணிகள் போராட்டத்தை தொடர்ந்ததால் இரு மார்க்கங்களிலும் செல்லக்கூடிய புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் என ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சென்னை கோட்டை ரயில்வே மேலாளர் பணி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பயணிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளிடமும் ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வந்த சென்னை கோட்டை ரயில்வே கூடுதல் மேலாளர் சச்சின் புனிதா கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இனிவரும் காலங்களில் ரயில்கள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இயக்கப்பட்டு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயணிகள் மீது வழக்கு பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது எனவும் தெரிவித்தனர். புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும் என சென்னை கோட்டை ரயில்வே கூடுதல் மேலாளர் சச்சின் புனிதா அளித்த உத்தரவாதத்தின் பேரில் 4 நேரமாக நீடித்து வந்த ரயில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனை அடுத்து இரு மார்க்கங்களிலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. பயணிகளின் போராட்டம் காரணமாக புது டெல்லி, அகமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்களும் காலதாமதமாக சென்றன.

Tags:    

Similar News