திருவள்ளூரில் உற்சாகத்துடன் 12-ம் வகுப்பு பொதுதேர்வை எழுதும் மாணவ மாணவிகள்
திருவள்ளூரில் உற்சாகத்துடன் 12-ம் வகுப்பு பொதுதேர்வை மாணவ மாணவிகள் எழுதி வருகிறார்கள்.;
தேர்வு எழுத உள்ள மாணவிகள் இறுதி கட்ட படிப்பில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வை உற்சாகத்துடன் மாணவ மாணவிகள் எழுதி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 8.51 லட்சம் மாணவ மாணவிகள், தனித்தேர்வர்கள் இந்த தேர்வினை எதிர்கொள்கின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 3225 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை தேர்வறைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொழித்தாள் தேர்வு தினமான இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசுப் பள்ளியில் காலை ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பாடங்களை மீண்டும் ஒருமுறை படித்து நினைவு கூர்ந்தனர். பின்னர் வழிபாட்டு திடலில் கூடிய மாணவர்களுக்கு தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகளை பள்ளி ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். இறைபாடு வழிபாடும் நடத்தப்பட்டது.அப்போது மாணவ மாணவிகள் தங்களது இஷ்ட தெய்வங்களை நினைத்து வழிபாடு செய்தனர்.தொடர்ந்து மாணவர்கள் தங்களது +2 தேர்வுகளை எதிர்கொள்ள தத்தமது தேர்வறைகளுக்கு சென்று மொழிப்பாடமான தமிழ் தேர்வினை உற்சாகத்துடன் எழுதி வருகின்றனர்.
இதேபோல் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, மீஞ்சூர், ஒரு லிட்டர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள +2 மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காப்பி அடிக்கும் மாணவர்களை கையோடு பிடிப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் நேரடியாக சென்று கண்காணித்து வருகிறார்கள்.