தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் - பெற்றோர்கள் சாலைமறியல்; போக்குவரத்து பாதிப்பு
Block Road -பஸ்கள் நிறுத்தாததை கண்டித்து சென்னை - கொல்கத்தா என்.எச் ரோட்டில், மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.;
ஸ்டாப்பில், பஸ் நிறுத்தாததை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Block Road -பொன்னேரி அருகே காலை நேரங்களில் அரசு பஸ்களை சரியாக நிறுத்தாததால், பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் அரசு பஸ்களை சிறைபிடித்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் மாநகரப் பஸ்களில் காலை நேரங்களில் பஸ் ஸ்டாப்பில், பஸ் நிற்பதில்லை, பள்ளி மாணவர்களை பஸ்சில் ஏற்றுவதில்லை என புகார் எழுந்த நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெடுவரம்பாக்கம், பஞ்செட்டி, நத்தம், தச்சுர், உள்ளிட்ட பகுதியிலிருந்து தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்வதற்கு தினந்தோறும் காலை எட்டு மணிக்கு, பள்ளிக்கு செல்வதற்கு பஞ்சட்டி தச்சூர் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்லும் பஸ்கள், மாணவர்களை பஸ்சில் ஏற்றாமல் வேகமாக செல்வதாகவும், தூரத்தில் சென்று, தள்ளி நின்று செல்வதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து காத்திருந்து வீட்டிற்கு செல்வதாகவும், பள்ளிக்கு தாமதமாக சென்றால், வகுப்புக்குள் அனுமதிக்காமல் வெளியே அனுப்புவதாகவும் கூறி பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ஆகியோர் மாணவர்கள், பெற்றோர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது இதனால் ஒரு மணி நேரம் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2