ஞாயிறு ஏரியில் மணல் அள்ளவந்த லாரிகள் சிறைப் பிடிப்பு
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஞாயிறு ஏரியில் மணல் அள்ளுவதை எதிர்த்து, அங்கு வந்த லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஞாயிறு ஏரியில் மண்குவாரி செயல்பட்ட போது அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி மண் அள்ளுவதை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது, தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் மண்குவாரி செயல்படுகிறது.
இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், விவசாயிகளின் பாசன நீர் ஆதாரம், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி,குவாரியில் மணல் அள்ள வந்த லாரிகளை ஊராட்சி மன்ற தலைவர் எல்லைய்யன் தலைமையில் லாரிகளை மறித்து, சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சோழவரம் போலீசார் சமரசம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மண்குவாரியை மூடும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் சமரசத்தை ஏற்காததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் மாவட்டத்தில் தங்க வைத்தனர்.