அரசு பள்ளியில் கதை சொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம்: ஆட்சியர் தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது

Update: 2022-04-25 04:00 GMT

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது லைட்ஹவுஸ் ஊராட்சியில் கதைசொல்லி கற்பிக்கும் திட்டத்தை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ்

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது லைட்ஹவுஸ் ஊராட்சி. இந்த ஊரா ட்சியில் உள்ள கூனங்குப்பம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தபட்டது. அதன்படி மடிக்கணினி, கம்ப்யூட்டர் விளையாட்டு உபகரணங்கள், கேமராக்கள் அன்றாடம் பயன்படுத்த உதவும் கருவிகள், சைக்கிள், நாற்காலி உள்பட பல்வேறு வகையான பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு சொல்லி எளிதில் புரிய வைக்கும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் திறந்து வைத்தார். பின்னர் இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதில், மீஞ்சூர் ஒன்றிய குழுதலைவர் ஜி.ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வழகிஎர்ணாவூரன், தமின்ஷா, லைட்ஹவுஸ் ஊராட்சிமன்ற தலைவர் கஜேந்திரன், திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நல உரிமைபிரிவு அமைப்பாளர் பழவை முகமது அலவி, கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News