பழவேற்காட்டில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா - அமைச்சர் நாசர் பங்கேற்பு
பழவேற்காட்டில் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
பழவேற்காட்டில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பழவேற்காட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், 69வது பிறந்தநாளையொட்டி நல உதவிகள் வழங்கி மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முகமது அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் சா மு நாசர் கலந்துகொண்டு ஏழை எளி யவர்களுக்கு நலஉதவிகளை வழங்கினார். விழாவில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், திருவெற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர்,முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர்,மற்றும் திமுக வை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பிற அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அசோகன் ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் தமின்ஷா, பழனி ஆகியோர் நன்றி கூறினர்.