ஶ்ரீ வலம்புரி விநாயகர் சமேத ஶ்ரீ பரிவட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரிக்குபட்டு கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ வலம்புரி விநாயகர் சமேத ஶ்ரீ பரிவட்டம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.;
பரிக்கப்பட்டு அருள்மிகு ஶ்ரீ வலம்புரி விநாயகர் சமேத ஶ்ரீ பரிவட்டம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பொன்னேரி அருகே பரிக்கப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ வலம்புரி விநாயகர் சமேத ஶ்ரீ பரிவட்டம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி பரிக்குப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வலம்புரி விநாயகர் சமேத ஶ்ரீ பரிவட்டம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, மகா சங்கல்பம், மகாபூர்ணாகுத்தி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து ஆலயத்தின் மீதுள்ள கோபுர கலசத்தின் மீது புனித நீரை கோபுர கலசங்களுக்கும் வலம்புரி விநாயகர் மற்றும் பரிவட்டம்மன் சாமிக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆவணங்களால் அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் கலந்து கொண்டனர். அவருக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பொன்னேரி, பழவேற்காடு சுற்று வட்டார பகுதிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆலயத்திற்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரிக்குப்பட்டு கிராம பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.