ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 1மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. திருமணத்தடை, ரியல் எஸ்டேட், தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம் வேண்டி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், 50, ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திரு ஆவணங்களால், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரிக்கு வந்து கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 1மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செய்தனர். அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிந்ததால் சிறுவாபுரியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.