சோழவரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
சோழவாரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
சோழவரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சோழவரம் அரசினர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சிறு குழந்தைகள் முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கண்பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, பேச்சுத் திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர் குழுவினர், 20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து. பின்னர் மதிப்பீடு சான்று வழங்கினர். பின்னர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்த அடையாள அட்டை மூலம் கல்வியில் முன்னுரிமை, இலவச நலத்திட்ட உதவிகள் உட்பட அரசின் அத்தனை சலுகைகளையும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாமில் மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சித்ரா, வட்டார கல்வி அலுவலர் முத்துலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர். சுகன்யா, பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் முன்னூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.