ஸ்மார்ட் வகுப்பறை அமையவுள்ள பள்ளி கட்டிடத்தை முன்னாள் துணை சேர்மன் ஆய்வு

பொன்னேரி அருகே ஸ்மார்ட் வகுப்பறை அமையவுள்ள பள்ளி கட்டிடத்தை முன்னாள் துணை சேர்மன் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-13 01:58 GMT

பொன்னேரி அருகே ஸ்மார்ட் வகுப்பறை அமைய உள்ள பள்ளி கட்டிடத்தை முன்னாள் துணை சேர்மன் சுமத்திரா குமார் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்டது அண்ணாமலைச்சேரி கிராமம் .இந்தப் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைய உள்ளது.

இதனையடுத்து இப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலரும், முன்னாள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவருமாகிய சுமத்திரா குமார் நேரில் சென்று பள்ளி கட்டிடத்தில் ஸ்மார்ட் வகுப்பு அமைவதற்காக கட்டிடம் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி,அ.தி.மு.க. நிர்வாகிகள் சாரங்கன், கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த பகுதியில் உள்ள அரசு தொட க்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை வருவதையொட்டி அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News