சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜை துவக்கம்

Murugan Kovil - சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜை துவங்கப்பட்டது.

Update: 2022-08-19 02:32 GMT

சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

Murugan Kovil -திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஆலய வளாகத்தில் கணபதி பூஜையுடன் நேற்று தொடங்கியது.

முதல் கால யாகசாலை பூஜைகள் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 6கால யாகசாலை சிறப்பு பூஜைகளுடன் 21ஆம் தேதி ஞாயிறன்று காலை 9.00 - 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் வருகையொட்டி ஆலயத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் வண்ணம் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாண், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாரதி, ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News