விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இருவருக்கு இழப்பீடு வழங்காததால் பள்ளிக்கு சீல்

மீஞ்சூர் அருகே பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்காததால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-07 02:15 GMT

தனியார் பள்ளிக்கு பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்த அதிகாரிகள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மே ஒன்றாம் தேதி கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்த போது மீஞ்சூர் பேரூராட்சியின் நிரந்தர தூய்மை பணியாளர் கோவிந்தன் மற்றும் ஒப்பந்த பணியாளர் சுப்புராயலு ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் சிமியோன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-இன் கீழ் உயிரிழந்த 2 குடும்பங்களுக்கும் 3 நாட்களுக்குள் தலா 15 லட்சம் வழங்க உத்தரவிட்டும், இழப்பீடு வழங்கப்படாததால் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News