கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு, ஒருவர் கைது

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-07-09 19:27 GMT
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே சேத்துப்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் மணல் தள்ளுவதாக வந்த புகார் வந்தது.

இதனை அடுத்து வெங்கல் உதவி ஆய்வாளர் அமர்நாத் தலைமையிலான போலீசார் கொசஸ்தலை ஆற்றில் சேத்துப்பாக்கம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சேத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து  மணல் திருட  பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News