சோழவரம் அருகே ஷீரடி சாய் பாபாவின் மகா சமாதி நாள் விழா சிறப்பு வழிபாடு
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் சாய்பாபாவின் 105ஆவது மகா சமாதி அடைந்த விழா நடைபெற்றது.
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் பாபாவின் 105வது மகா சமாதி அடைந்த விழா நடைபெற்றது. இதில் திரளான சாய் பக்தர்கள் பங்கேற்று பாபாவை வழிபட்டு சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் சாய்கிருபா நகரில் உள்ள சாய்ராம் ஆஸ்ரமத்தில் சத்குரு ஷீரடி சாய்பாபா மந்திர் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் பாபாவின் 105வது ஆண்டு மகா சமாதி அடைந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முதல் நிகழ்வாக கணபதி ஹோமம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சக்தி வாய்ந்த மஹாயாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹதி செய்யப்பட்டது.
இதையடுத்து புனிதநீர் அடங்கிய கலசத்தை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து பாபாவுக்கு அபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கரங்களால் பாபாவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.விழாவின் நிறைவாக மலர் அலங்காரத்தில் ஜொலித்த சாய்பாபாவுக்கு பக்தர்கள் பஜனை ஆரத்தி பாடல்கள் பாடினர் பின்னர் மஹா ஆரத்தி காட்டப்பட்டது.விழாவில் சுற்றுவட்டாரத்ைத சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட சாய்பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபாவை வழிபட்டு சென்றனர்.
இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள சாய்பாபா ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலும் சாய்பாபா முக்தி அடைந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாய்பாபா பக்தர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு பாபாவை வழிபாடு செய்தனர்.