100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
அருமந்தை கூட்டுச்சாலையில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
அருமந்தை கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அருமந்தை கூட்டுச்சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலையை மேற்கொள்வதற்கான இடத்தினை பணியாளர்களையே காண்பிக்குமாறு அதிகாரிகள் கேட்பதாக குற்றம்சாட்டினர். 100 நாள் வேலையை 150 நாள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், ஊதியத்தை 300 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.
அருமந்தை ஊராட்சியில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், 100 நாள் வேலைய மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகவும் உடனடியாக தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் 100 நாள் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.