சோழவரம் அருகே மழை நீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மழை நீர் வடிகால் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2022-11-28 07:38 GMT

சோழவரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

சோழவரம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த மழைநீர் கால்வாய்களை மீட்டு அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் புறம்போக்கு, ஏரி, குளங்கள், அவற்றிற்கான வடிகால் பகுதிகள், வரத்து வாய்க்கால்கள், மழை நீர் வாய்க்கால்கள் ஆகியவை தமிழக்தில் எந்த வித பாகுபாடும் இன்றி பொது மக்கள் மற்றும் அரசியல் வாதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன.இப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பாரபட்சம் இன்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது எல்லா மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆங்காடு ஊராட்சியில் அடங்கிய செம்புலிவரம் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி செம்புலிவரம் பகுதிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் வந்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து அதிரடியாக களமிறங்கிய அரசு அதிகாரிகள் இன்று ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு சாலையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் கால்வாயை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு தூர்வாரி வருகின்றனர்.

Tags:    

Similar News