திருநிலை ஊராராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலங்கள் மீட்பு
திருநிலை ஊராராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஞாயிறு குறுவட்டத்திற்கு உட்பட்ட திருநிலை கிராமத்தில் ஒருவர் நெற்பயிர் மூலம் சுமார் 50 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் ஞாயிறு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சந்தான லட்சுமி மற்றும் திருநிலை கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நீர்நிலை புறம்போக்கு நிலங்களை அகற்றப்பட்டது.
பின்னர் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் மீண்டும் யாரும் பயிரிடக் கூடாது என்று அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைத்தனர். இதில் திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்முசிவகுமார், துணைத்தலைவர் தனசேகர் மற்றும் கிராம உதவியாளர் பலர் உடனிருந்தனர்.