Public Request Change EB Damaged Wire உயிர்ப்பலி ஏற்படும் முன் விழிப்பார்களா மின்வாரிய அதிகாரிகள்:பொதுமக்கள் கோரிக்கை
Public Request Change EB Damaged Wire பழவேற்காடு அருகே பழுதடைந்து அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை.புதியதாக மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
இப்போ விழுமோ....எப்ப விழுமோ....என அச்சத்தில் பொதுமக்கள் பயணிக்க பயமுறுத்தும் பழுதடைந்த மின் ஒயர்கள்
Public Request Change EB Damaged Wire
பழவேற்காடு அருகே கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தொடர்ந்து சாலைகளில் அறுந்து விழும் உயர் மின்னழுத்த கம்பிகளால் பொதுமக்கள் மரண பயத்தில் இருப்பதோடு இந்த பழுதடைந்த கம்பிகளை எடுத்துவிட்டு வேறு புதியதாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?....
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்களும், பழவேற்காடு அருகே உள்ள கோட்டைக்குப்பம் ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதேபோல் நடுவூர் மாதாகுப்பம்,கோட்டைகுப்பம்,ஆண்டி குப்பம்,தோனிரேவு,ஜமீலாபாத,டாக்டர் அம்பேத்கர் நகர்,செஞ்சி அம்மன் நகர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் சுமார்20. ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பழவேற்காட்டில் இருந்து டாக்டர் அம்பேத்கர் நகர் வழியாக தோனிரேவு, ஜமீலாபாத்,செஞ்சியம்மன்நகர் கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றது. அங்கிருந்து மின்மாற்றிகள் மூலம் கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30.ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட மின் கம்பங்களால் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் பழுதடைந்து அவ்வப்போது அறுந்து ரோடுகளில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் விழுந்து விபத்துகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக தோனிரேவு,செஞ்சியம்மன் நகர்,ஜமீலாபாத் கிராமங்களை இணைக்கும் கூட்டுச்சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கம்பிகள் இதுவரை நான்கு முறை அறுந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் அவர்கள் வந்து தற்காலிகமாக மின் கம்பிகளை இணைத்து சரி செய்து செல்வதும் மீண்டும் கம்பிகள் அறுந்து விழுவதுமாக தொடர்கதை ஆகி உள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு 7மணி அளவில் மக்கள் நடமாடக்கூடிய நேரத்தில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து சாலையின் குறுக்கே பயங்கர சத்தத்துடன் வெடித்து விழுந்தது.. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மயிரிழையில் வாகனத்தை நிறுத்தி உயிர் தரப்பினர்.
பின்னர் மின்சாரத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. ஆனால் இரவு முழுவதும் பணியாளர்கள் வந்து பணி செய்யாத காரணத்தினால் கோட்டைகுப்பம் ஊராட்சிக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த நிலையில் போதிய மின்சாரத்துறை பணியாளர்கள் இல்லாததே உடனடியாக மின் சப்ளை சரி செய்யாதற்கான காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் அடிக்கடி இவ்விடத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுவது எந்த நேரமும் பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மரண பயத்தில் சென்று வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய மின்கம்பிகளை அமைத்து பொதுமக்களை இந்த விபத்துகளிலிருந்து நிரந்தரமாக காப்பாற்ற தேவையான நடவடிக்கையினை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண்பார்களா?.....