குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

Provision Of Drinking Water Road Block பொன்னேரி அருகே கடந்த 1மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம்.;

Update: 2024-03-20 04:00 GMT

Provision Of Drinking Water Road Block 

பொன்னேரி அருகே ஆவூர் ஊராட்சியில் ஒரு மாத காலமாக சீரான குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி பெண்கள் காலி குடங்களுடன் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Provision Of Drinking Water Road Block 



திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 1மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Provision Of Drinking Water Road Block 



அப்போது அவ்வழியே வந்த அரசுப் பேருந்தையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யாததால் ஒரு கேன் தண்ணீரை ரூபாய் 30 முதல் 40 ரூபாய் வரை விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.2நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News