மக்கள் நீதி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பொன்னேரி அருகே அத்திப்பட்டு புது நகர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மக்கள் நீதி மையம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.;

Update: 2024-01-15 06:00 GMT

அத்திப்பட்டு புதுநகர் பகுதி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மக்கள் நீதி மையம் சார்பில், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில், அத்திப்பட்டு புதுநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் சுமார் 250 பள்ளி மாணவ மாணவிகள் படிக்கின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் ஹவர் இந்தியா டிரஸ்ட் இணைந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சி திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட செயலாளர் தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சண்முகப்ரியன், ஒருங்கிணைப்பாளர் சந்தியா,அத்திப்பட்டு மகளிர் குழு விஜயா,பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி மற்றும் ஹவர் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதில் பேசிய மாவட்ட செயலாளர் தேசிங்கு ராஜன் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் இப்பகுதியில் பெரும்பாலான மாணவர்களின் நோட்டுப் புத்தகங்கள் மழையில் சேதமாகியுள்ளதாக தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனிடம் தெரிவிக்கப்பட்டு அதன் பேரில் இந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி இப்பகுதி மக்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் நிவாரண தொகுப்புகளுடன் போர்வைகள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டது, அது மட்டுமின்றி பல்வேறு மருத்துவ முகாம்களும் இங்கு நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

Similar News