நிதி ஒதுக்காததை கண்டித்து, தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல்

தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து பொன்னேரியில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடந்தது.;

Update: 2024-08-02 03:30 GMT

நிதி ஒதுக்காததை கண்டித்து, தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் நடத்தப்பட்டது.

பொன்னேரியில் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முறையான திட்டங்களையும் நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டடம் நடந்தது. இதில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 


அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இடதுசாரி அமைப்புகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லெனிநிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக வந்து அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அஞ்சல் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம், 100 நாள் வேலைத்திட்டம், கல்வித்துறை என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுப்பு தெரிவித்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பொன்னேரி அஞ்சல் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்ஜெட் நகலையும் எரித்தனர்.

இதனை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Similar News