பொன்னேரி அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Thiruvallur District News -பொன்னேரி அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பு வாசிகள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-11-10 09:30 GMT

பொன்னேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Thiruvallur District News -பொன்னேரி அருகே ஏரிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை  அப்பகுதி குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு கும்மங்கலம் ஏரிக்கரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள்  சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும்  ஏழை எளிய மக்கள் மக்கள் ஆவார்கள். இவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவினை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பின்பற்றி நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி வருகிறார்கள். அந்த  அடிப்படையில் கும்மங்கலம் ஏரிக்கரையில் உள்ள வீடுகளை 21நாட்களுக்குள் காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கரையில் வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கரையில் வசிக்கும் தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அறிவிக்கும் அத்தனை சலுகைகளும் தங்களுக்கும் கிடைத்து வரும் நிலையில் தங்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மாற்று இடம் ஒதுக்கும் வரை  அதே இடத்தில் தொடர்ந்து தங்களை குடும்பத்துடன் அங்கே வசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை  நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலுமே ஏரி ஆறு கரைகளில் பலரும் வசித்து வருகிறார்கள். அரசு கட்டிடங்கள் குறிப்பாக பஸ் நிலையங்கள்  கூட ஏரி குளங்களில் கட்டப்பட்டு தற்போது வரை செயல்பாட்டில் உள்ளன.

தங்களுக்கு  மாற்றும்  இடம் இல்லாத காரணத்தினாலும் வேறு இடம் வாங்குவதற்கு கூட தங்களுக்கு வசதி இல்லை என்றும். திடீரென வந்து காலி செய்து இடத்தை வழங்குமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும், தங்களுக்கு எங்கே செல்ல வேண்டும் என்று கூட தெரியவில்லை என்றும் மேலும் தாங்கள் குழந்தைகள் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருவதாகவும், தற்போது இந்த வீடுகளை காலி செய்து விட்டால் இருக்க இடம் கூட இல்லை என்று அரசு தங்களுக்கு இதே பகுதியில் வசித்திட அனுமதி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து புலம்பி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தால் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News