ஆரணி இறுதி சடங்கில் பிரச்சனை: வாலிபருக்கு அரிவால் வெட்டு- இருவர் கைது!
ஆரணியில் செக்யூரிட்டியின் உடல் அடக்கத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு வெட்டு விழுந்தது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி சுப்பிரமணியன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (62). செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சம்பவத்தன்று இறந்துவிட்டார். இவரது உடல் அடக்கத்தின் போது, தட்சிணாமூர்த்தியின் உறவினருக்கும், சென்னை செங்குன்றத்தை சேர்ந்த முகேஷ் (18) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இன்று காலை முகேஷ், காவாங்கரையை சேர்ந்த தனது நண்பர்கள் இருவரை அழைத்துக்கொண்டு சுப்பிரமணிய நகருக்கு வந்து, சுதாகர் (18) என்பவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த சுதாகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆரணி காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்காள தரனேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீசார் ராஜு, பரந்தாமன் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று முகேசை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.