ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை
பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க ஆற்றுக்கு செல்லும் சாலையில் பள்ளங்களை வெட்டி முன்னச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்;
மணல் கடத்தலை தடுக்க பாதையில் பள்ளம் தோண்டிய பொதுப்பணித்துறையினர்
ஆந்திர மாநில எல்லையான திருவள்ளூர் மாவட்டம் பிச்சாட்டூர் பகுதியிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்,ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காட்டு ஏரியில் கலக்கும் ஆரணி ஆறு உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் ஆரணி ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில் பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பொதுப்பணித்துறையினர் பொன்னேரி வழியாக ஆரணி ஆற்றிற்கு செல்லும் வழிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளங்கள் வெட்டி ஆற்றில் வாகனங்கள் சென்று மணல் எடுக்காதவாறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.