ஜெயலலிதா ஆட்சியில் தொடர்ந்து மின் பற்றாக்குறையால் தான் திமுக ஆட்சியில் மின் வெட்டு ஏற்பட்டது என திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை ஆதரித்து வல்லூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொது கூட்டத்தில் பேசிய சுப.வீரபாண்டியன் கூறும் போது, துயரமான காலகட்டத்தில் உள்ளோம். இது வழக்கமான தேர்தல் அல்ல, வேறு மாதிரியான யுத்தம் . சில பத்திரிகைகள் விளம்பரத்தை செய்தியாக்குகின்றன எனவும், தள்ளுபடியான வழக்கை கூட செய்தியாக போடுகின்றனர் எனவும், அமித்ஷா கொலை வழக்கில் கைது, எடப்பாடி பாலியல் வழக்கில் கைது என செய்தி நிறுவனங்கள் செய்தி விளம்பரங்கள் வெளியிட தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். தவறாக விளம்பர செய்திகளை போடாதீர்கள் எனவும் அவர் கூறினார்.
உதயநிதிஸ்டாலின் எடுத்துள்ள செங்கல் தான் பாஜகவுக்கு கட்டப்போகும் கல்லறை .பாஜகவினர் வன்முறையாளர்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என கூறியவர் இப்போது மறந்து விட்டார் .திமுக ஆட்சியில் மின் வெட்டு இருந்தது உண்மை தான், ஜெயலலிதா ஆட்சியில் மின் பற்றாக்குறை இருந்ததால் தான் திமுக ஆட்சியில் மின் வெட்டு ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.