பொன்னேரி அருகே செல்போன், பணத்திற்காக தூத்துக்குடி துறைமுக ஊழியர் கொலை

பொன்னேரியில் நடந்து சென்ற துறைமுக ஊழியரை செல்போன், பணத்திற்காக கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-18 11:56 GMT

கொலை செய்யப்பட்ட பாபு மற்றும் கொலையாளி இதயராஜ்.

பொன்னேரி அருகே செல்போன், பணத்தை வழிப்பறி செய்து கொலை செய்த கொள்ளையளை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் சாலையோரம் தலையில் ரத்த காயங்களுடன் கிடந்த அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் சாலையோர கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ஒருவரை பின் தொடர்ந்து மற்றொருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்றது தெரிய வந்தது. அந்த நபரை பிடித்து நடத்திய விசாரணையில் இதயராஜ் (27) என்றும், நடந்து சென்ற நபரிடம் இருந்த செல்போன், 500ரூபாயை பறித்து கொண்டு கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் இறந்தவர் பெரியபாளையத்தை சேர்ந்த பாபு (35) என்பதும் இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து வழிப்பறி கொள்ளையன் இதயராஜை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

துறைமுக ஊழியர் பாபு விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார். அவர் சாலையில் நடந்து சென்றபோது இதயராஜ் அவருக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்று அவரது செல்போனை முதலில் பறித்து உள்ளார். அதனை அவர் தடுத்த போது தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News