சோழவரம் அருகே பொன்னியம்மன் ஆலய திருவிழா
சோழவரம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் ஆலய திருவிழா பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
சோழவரம் அருகே அருமந்தை ஊராட்சி புதுபாக்கம் கிராமத்தில் நடந்த ஊர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, சோழவரம் அருகே உள்ள அருமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புதுபாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஊர்திருவிழா கிராமதலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மூலவர் அம்மனுக்கு அதிகாலை பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன், ஜவ்வாது, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனை அடுத்து அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள முழங்க வானவேடிக்கைவுடன் திருவீதி உலா மற்றும் ஊர்பொதுமக்கள் அவரவர் வீட்டுவாசலில் பழங்கள், இனிப்புகள், புடவை,வளையல், மஞ்சள்,குங்குமம், பூக்கள் சீர்வரிசையாக வைத்து கும்பம் படையலிட்டு கிடாவெட்டி தீபாராதனை காண்பித்தும், அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவிற்கு அருமந்தை ஊராட்சி, புதுபாக்கம் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சஊர்திருவிழாவை சிறப்பித்தனர்.