பொன்னேரி; கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீர் உயிரிழப்பு
பொன்னேரி அருகே நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிய வாலிபர், திடீரென மூச்சுத் திணறி, உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.;
பொங்கல் பண்டிகை நாளில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆரணி பேரூராட்சி பகுதியில் வசித்தவர் மனோஜ் குமார்.(35) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றில் பணியாற்றினார்..இந்நிலையில், இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொன்னேரி அடுத்துள்ள சொந்த ஊரான கம்மார் பாளையம் சென்றுள்ளார். அந்த கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரோடு விளையாட கொண்டிருந்த சக நண்பர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, கீழே விழுந்த மனோஜ் குமாரை சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார் மனோஜ் குமாரின் உடலை, ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.