பொன்னேரி; பாம்பு கடித்த மாணவி உயிரிழப்பு

பொன்னேரியில் பாம்பு கடித்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில், இந்த சோகம் நடந்துளளது.;

Update: 2023-05-15 03:15 GMT

பொன்னேரியில் பாம்பு கடித்து, மாணவி அக்‌ஷயா உயிரிழந்தார். (கோப்பு படம்)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரதாப் என்பவரது மகள் அக்க்ஷயா (17) அண்மையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரி சேர்க்கைக்காக காத்திருந்தார். நேற்று பிற்பகல் அக்க்ஷயா வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, அவரது காலில் பாம்பு  கடித்துள்ளது. அக்க்ஷயாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் உடனடியாக அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அக்க்ஷயாவிற்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து மாணவி அக்க்ஷயா சடலம், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News