பொன்னேரி: சோம்பட்டு கிராமத்தில் 6 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

பொன்னேரி சோம்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

Update: 2021-06-02 07:47 GMT

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை மீட்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஊராட்சி நிர்வாகம் களமிறங்கியது.

முதற்கட்டமாக ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 சென்ட் நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், வருவாய்த்துறை அதிகாரி மதிவாணன், கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் மீட்டனர்.

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம் தெரிவித்தார். மேலும் சோம்பட்டு ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்கும் பணிகள் தொடரும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News