பொன்னேரி: ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2பேர் கைது!
ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜனப்பஞ்சத்திரம் கூட்டுச் சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாடி கம்பெனி அருகே வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது பொன்னேரி மார்க்கத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் முன்னால் கருப்பு நிற லேப்டாப்பினை வைத்துக்கொண்டு வந்த 2 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.