பொன்னேரி நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார் டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்று கவுன்சிலர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர் களான டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், லேகா கதிரவன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் நேற்று பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவ்வகையில் பொன்னேரி நகராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 27 வார்டு கவுன்சிலர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.