பொன்னேரி நகர் மன்ற துணைத் தலைவராக வக்கீல் விஜயகுமார் பதவி ஏற்பு
பொன்னேரி நகர் மன்ற துணைத் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் பதவி ஏற்றார்.;
திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரி நகரமன்றத் தலைவராக தி.மு.க. வைச் சேர்ந்த டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் என்பவர் அண்மையில் பதவி யேற்றார்.இந்நிலையில் துணைத்தலைவரான அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் விஜயகுமாருக்கு நேற்று ஆணையாளர் தனலட்சுமி பதவி பிரமாணம் செய் து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், அ.தி.மு.க. திருவள்ளூர் வடக்கு மாவ ட்ட செயலாளரும், முன்னாள் எம். எல். ஏ.வுமான சிறுனியம் பலராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான கிருஷ்ணாபுரம் பி.டி. பானு பிரசாத், மீஞ்சூர் முன்னாள் துணை சேர்மேனும் ஒன்றிய கவுன்சிலரு மான சுமித்ராகுமார்,லைட் ஹவுஸ் ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்னாவூரான், பொன்னேரி முன்னாள் பேரூராட்சித்தலைவர்சங்கர், பேரவை செயலாளர் செல்வகுமார் நகர செயலாளர் உபயதுல்லா, மற்றும் மாவட்ட ஒன்றிய நகரம் என அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.