பொன்னேரி: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் 64 பேருக்கு நல உதவி!

பொன்னேரியில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.;

Update: 2021-06-03 17:54 GMT

பொன்னேரியில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஆணைகளையும் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என 64 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆட்சி அமைந்த 100 நாட்களில் உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி அனைத்து மனுக்களின் மீதும் விரைவில் தீர்வு காணப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அப்போது உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொன்னேரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News