புழல் மத்திய சிறையில் போலீஸ் அதிகாரிகள் 2 மணி நேரம் அதிரடி சோதனை
புழல் மத்திய சிறையில் கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக போலீஸ் அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.;
சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை கமிஷனர் சுந்தரவதனம் ஐபிஎஸ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். புழல் சிறையில் கைதிகள் அதிக அளவில் கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். சிறைக்குள்ளே செல்போன் பயன்படுத்தி கைதிகள் தங்கள் கூட்டாளிகள் மூலம் வெளியிலேயே பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.
புகாரையடுத்து, புழல் சிறையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை மாதவரம் துணை கமிஷனர் சுந்தரவதனம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சிறை வளாகத்திலும் சிறைகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது செல்போன், கஞ்சா போன்றவை எதுவும் சிக்கவில்லை எனவும், மேலும் இதுபோன்ற சோதனைகள் வழக்கமானது தான். இந்த செயல் அவ்வப்போது தொடரும் எனவும் தெரிவித்தனர்.