பழவேற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது
பழவேற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சியதை கண்டுப்பிடித்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பூமிகோட்டை கிராமத்தில் வசிப்பவர் ஷாஜகான் இவருக்கு 2 மனைவிகளும் திருமணமான ஒரு மகளும் உள்ளனர்.
பழவேற்காடு பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வரும் இவர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவரது வீட்டில் சென்று பார்த்த பொழுது சாராயம் காய்ச்சும் பானைகள், ஊரல்கள் போட்ட பொருட்கள், பேரல்கள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஷாஜகானை கைது செய்து சாராயம் காய்ச்சிய பொருட்களையும் போலீசார் கைப்பற்றி திருப்பாலைவனம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடமாடும் பிரதான சாலை அருகே சாராயம் காய்ச்சும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.