பொன்னேரி அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்

பொன்னேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடி மாணவர்கள் தீய பழக்கங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியேற்பு.

Update: 2022-03-31 04:45 GMT

பொன்னேரி அரசுப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய காவல்துறையினர்.  

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் காவல்துறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மத்தியில் பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுப்பிய ஆய்வாளர் தீய பழக்கங்கள் என்றால் என்னென்ன என்பது குறித்து பேசினார்.

அதற்கு பதிலளித்த மாணவன் ஒருவன் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணிப்பது என கூறியதும் சக மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்திய நிலையில், மாணவர்கள் அந்த தீய பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என ஆய்வாளர் கேட்டுக்கொண்டார். மேலும் தினந்தோறும் உபயோகப்படுத்தும் செல்போனில் தீயவற்றை தவிர்த்து கல்வி சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ஆய்வாளர் செல்போன் எண் மாணவர்களிடம் வழங்கப்பட்டு தவறான செயல்கள் ஏதேனும் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தவறான வழிகளில் செல்ல மாட்டோம். தீய பழக்கங்களில் ஈடுபட மாட்டோம் என அப்போது உறுதியேற்று கொண்டனர்.

Tags:    

Similar News