மீஞ்சூர் பஜாரில் பொதுக்கழிப்பிடம் கட்ட நிலம் ஒதுக்கி தருமாறு எம்எல்ஏ மனு

மீஞ்சூர் பேரூராட்சியில் பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கித் தருமாறு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Update: 2024-08-09 06:00 GMT

மீஞ்சூர் பஜாரில் பொது கழிப்பிடம் கட்ட இடம்  தேர்வு செய்து தர, சார் ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் மனு அளித்தார்.

மீஞ்சூர் பஜாரில் பொது கழிப்பிடம் கட்டுவதற்கு விரைவாக இடத்தினை தேர்வு செய்து ஒப்படைக்குமாறு சார் ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் கோரிக்கை மனுவை அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சியில் பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஜாரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.அன்றாட தேவைகளுக்காக கடைகளில் பொருட்களை வாங்குவோர் மட்டுமின்று பணி நிமித்தமாக பேருந்து, ரயில்களில் செல்வோர்,பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மீஞ்சூர் பஜாரை கடந்து சென்று வருகின்றனர்.

இந்த பஜாரில் பொது கழிப்பிடம் கட்டி தர வேண்டும் என பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மீஞ்சூர் பேரூராட்சியில் வருவாய்துறைக்கு சொந்தமான 3.சென்ட் இடம் உள்ள நிலையில் அந்த இடத்தில் பொது கழிப்பிடம் கட்டிடத்தை கட்டுவதற்கு அந்த நிலத்தை ஒதுக்கி தந்திடுமாறு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த்திடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

மீஞ்சூர் புகாருக்கு வரும் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதால் இடத்தை ஆய்வு செய்து ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் நிலக்கரி, சாம்பல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் மாசு தொல்லையை கட்டுப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தினார். மனுவை பெற்று கொண்ட சார் ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதியளித்தார்.

மோகன்ராஜ் வார்டு உறுப்பினர் அபுபக்கர், கம்யூனிஸ்ட் கட்சியை மாவட்ட நிர்வாகி கதிர்வேல் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.

Similar News