லோன் வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் பணம் பறித்த ஆசாமி கைது
பொதுமக்களிடம் லோன் வாங்கி தருவதாக கூறி ஆவணங்களை வாங்கி நூதன முறையில் பணம் பறித்த ஆசாமி கைது
திருவள்ளூர் மாவட்டம் பொனேரியைச் சார்ந்த இளங்கோ வயது 33 என்பவர் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் தான் வங்கியில் இருந்து பணம் வாங்கி தருவதாகவும் அதற்காக 15 சதவீதம் கமிஷன் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார்
ஒரு லட்ச ரூபாய் வாங்கி தரும் பட்சத்தில் பதினைந்தாயிரம் கமிஷன் தொகை எடுத்துக் கொண்டு மீதி தொகையை கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ஆதார் அட்டை புகைப்படம் வங்கி தகவல்கள் என அனைத்தையும் சேகரித்துள்ளார்.
ஆனால், லோன் வாங்கி கொடுக்காமல் அவர்களிடமிருந்து வாங்கிய தகவல்களை வைத்து தனியாக கம்பெனி ஆரம்பிப்பது போன்று பாவனை காட்டி ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்துள்ளார்
இதனைத் தொடர்ந்து விமலா என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணலி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து, இளங்கோவனை பிடித்து நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது இது போன்று பலரிடம் தகவல்களை வாங்கி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. மேலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகவே பணம் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது மேலும் இளங்கோவனின் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்