மாற்று இடம் கேட்டு பொன்னேரி எம்எல்ஏ விடம் நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை

பொன்னேரியில் ஆராணியாற்றங்கரையில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்;

Update: 2022-07-28 10:30 GMT

 நரிக்குறவர் இன பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை நேரில் சந்தித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

பொன்னேரியில் ஆராணியாற்றங்கரையில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதால் மாற்று இடத்தில் இடம் ஒதுக்கி பட்டா வழங்க எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஆரணியாற்றங்கரையில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பேரில் 21நாட்களுக்குள் வீடுகளை அப்புறப்படுத்துமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த நரிக்குறவர் இன பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை நேரில் சந்தித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

அந்த மனு விவரம்: 50ஆண்டுகளாக வசித்து வந்த இடத்தில் கல்லூரி வருவதாக கூறி அதிகாரிகள் தங்களை ஆற்றங்கரையில் குடியமர்த்தியதாகவும், தற்போது 20ஆண்டுகள் வசித்து வரும் நிலையில் இந்த இடத்தையும் மீண்டும் காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என தெரிவித்தனர். தற்போது வசிக்கும் ஆற்றின் கரையோரத்தில் மாற்று இடத்தில் இடம் ஒதுக்கி பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக நரிக்குறவர்களிடம் எம்எல்ஏ உறுதியளித்தார்.


Tags:    

Similar News